Main Pages Kathiravan.com

Sonntag, 9. Januar 2011

தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழர் பலத்தை நிரூபிக்குமா; இல்லை குழம்புமா.........................?உள்ளூராட்சித் தேர்தல் எந்தக் கூட்டணியில் யார்?:


உள்ளூராட்சித் தேர்தல் எந்தக் கூட்டணியில் யார்? ஈபிடிபி, தமிழ் மக்கள்

விடுதலைப் புலிகள் ஆகியனவும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தக் கட்சிகளை அரங்கத்துடன் இணைந்து போட்டியிட வைப்பது குதிரைக் கொம்பான காரியம் தான். ஏனென்றால் இந்தக் கட்சிகள் ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பவை.

யாழ்ப்பாணத்தில் ஈபிடியின் தயவு இல்லாமல் ஆளும்கட்சியால் தலையெடுக்க முடியாது. அது ஏற்கனவே யாழ்.மாநகரசபைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்ட விடயம். அதுபோலவே மட்டக்களப்பில் ஆளும்கட்சிக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவு தேவை.ஆனால் மடடக்களப்பில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படவில்லை.

ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கடசிகளால் அத ன் சிறகுக்குள் இருந்து வெளியே வருவது சிரமமான காரியமாகவே இருக்கும். அப்படி வெளியே வந்து அரங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அது ஆளும்கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கின்ற ஒரு தேர்தலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு

இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்படும்போது தமிழரங்கத்தின் நிலை குழப்பமாகவே இருந்தது இன்று காலை கிடைத்த செய்திகளின் படி  தமிழ் கட்சிகளின் அரங்கம் குழம்பியது - ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி. கட்சிகள் வெளியேறின என அறியமுடிகின்றது

கட்டுரையாளர் கபில் இன்போதமிழ் குழுமம்

இனி,
சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு தேர்தலுக்கு நாடு தயாராகவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றதற்குப் பிறகு, எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப் போகிறது. ஏற்கனவே பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் அரசியல் கட்சிகள் இப்போதே இறங்கி விட்டன.


யார் எந்த அணியில் போட்டியிடுவது, எங்கெங்கு எத்தனை பேரைப் போட்டியில் நிறுத்துவது என்ற கணக்கெடுப்புகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.இந்தக் கட்டத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றினதும் நிலைப்பாடுகள் என்ன, அவை என்ன நிலையில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

தமிழர் பகுதிகளில் முக்கியமான ஒரு கட்சியாக உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இது இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் போலத் தெரிகிறது. ஏற்கனவே இதுபற்றி ஆராயும் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் இணைத்துப் போட்டியில் நிறுத்தும் திட்டத்துடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இருந்தாலும், அதற்கு கூட்டமைப்பு இணங்குமா என்பது சந்தேகம். ஏனென்றால் தமது பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது. அத்துடன் கூட்டணி சேர்வது தமது தனித்துவத்தைப் பாதிக்கும் என்ற கருத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் உள்ளது. அதேவேளை, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சிவாஜிலிங்கம் கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்த முயற்சிக்குப் புளொட், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளன.

ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளையும் இணைத்துப் போட்டியிட வைக்க முனைவதாகவும் கூறியுள்ளார் சிவாஜிலிங்கம்.

இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள மூன்று கட்சிகளும் ஏற்கனவே யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலின் போது இணைந்து கொண்டவை தான். ஆனால் கடைசி நேரப் பிரச்சினைகளால் அவை தனித்தனியே போட்டியிட்டன. இப்போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு ஆச்சரியப்படுத்தும் வகையிலானதாக இல்லாவிட்டாலும் அது நிலைத்து நிற்க வேண்டும்.

ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியனவும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தக் கட்சிகளை அரங்கத்துடன் இணைந்து போட்டியிட வைப்பது குதிரைக் கொம்பான காரியம் தான். ஏனென்றால் இந்தக் கட்சிகள் ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பவை.

யாழ்ப்பாணத்தில் ஈபிடியின் தயவு இல்லாமல் ஆளும்கட்சியால் தலையெடுக்க முடியாது. அது ஏற்கனவே யாழ்.மாநகரசபைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்ட விடயம். அதுபோலவே மட்டக்களப்பில் ஆளும்கட்சிக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவு தேவை.ஆனால் மடடக்களப்பில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படவில்லை .

ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் அத ன் சிறகுக்குள் இருந்து வெளியே வருவது சிரமமான காரியமாகவே இருக்கும். அப்படி வெளியே வந்து அரங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அது ஆளும்கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கின்ற ஒரு தேர்தலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கிடையே தேர்தல் என்று வந்துவிட்டாலே ஆளும்கட்சிக்குத் தலைவலியும் கூடவே வந்துவிடும்.

காரணம் விருப்பு வாக்குகளுக்காக அவர்களது வேட்பாளர்கள் மோதிக் கொள்வது சர்வசாதாரணம்.

நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களிலேயே இவை உச்சம் பெற்றிருக்கும் போது உள்ளூராட்சித் தேர்தல் என்றால் கேட்கவா வேண்டும்.

இதனால் தான் இந்தமுறை முந்திக் கொண்டுள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன.

விருப்பு வாக்குளைப் பொறுத்து சபைகளின் தலைவர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள்.

பொருத்தமானவர்கள் மட்டுமே அதற்குத் தெரிவு செய்யப்படுவர் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாத் தேர்தல்களிலும் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிலோ கணக்கிலான நகைகளைக் காதிலும், கையிலும் அணிந்து கொண்டு மில்லியன் கணக்கில் பிரசாரத்துக்காக செலவழிக்கும் நிலையை மாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும்கட்சியைப் பொறுத்தவரையில் பெரிய பிரச்சினையாக இருப்பது ஏற்கனவே இருந்த பல சபைகளில் காணப்பட்ட மோசமான நிர்வாகம் தான். இதன் காரணமாக ஐந்து உள்ளூராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டம் தோல்வியடைந்தது. இதில் மூன்று மாநகரசபைகளும் அடங்கும்.

இது ஆளும்கட்சிக்குப் பெருத்த அவமானத்தைத் தேடித் தந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் சுத்தமான, நாணயமான அரசியல்வாதிகளை மட்டும் களமிறக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் புதுமுகங்களை அதிகம் தேட வேண்டியிருக்கும்.

வடக்கு, கிழக்கு நிலையைப் பொறுத்தவரையில் ஆளும்கட்சி தனியாக நிற்க முடியாது.
 கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்தும், வடக்கில் ஈபிடிபியுடன் இணைந்துமே போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது.

இது மிகவும் பலவீனமானதொரு நிலை.

ஆனாலும் ஆளும்கட்சியைப் பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டது இதன் முதற்கட்டம் எனலாம்.

ஆளும்கட்சி இம்முறை தனித்து நின்று மோதிப் பார்க்க முனைந்தால் தான் அதன் பலம் பலவீனம் தெளிவாகும்.

ஆனால் அது விசப்பரீட்சையாகி விடும் என்பதால் அதைத் தவிர்க்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்து,
ஐதேக, இப்போது தன்னிடம் இருந்த அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் இழந்து விட்டுத் தனித்து நிற்கிறது.

என்றாலும் அதன் வீராப்புக்குக் குறைச்சலைக் காணவில்லை.

முன்னர் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் சேர்ந்திருந்தன. இப்போது அவை எதுவும் கூட்டணியில் இல்லை.

இதனால் தனித்தே தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது,

இதற்குள் உட்கட்சித் தேர்தல் வேறு நடக்கவுள்ளது.

அந்தப் பிரச்சினையை சரி செய்து கொண்டு ஐதேக முழுவீச்சுடன் தேர்தலைச் சந்திக்குமா என்பதை கணிக்க டமுடியாதுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் வடக்கு,கிழக்கில் தனித்தே போட்டியிடப் போகிறது.

கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் இதையே விரும்புவதாக கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனாலும் ஏனைய இடங்களில் அது ஆளும்கட்சியின் தயவை நாட வேண்டியிருக்கும்.

இல்லையேல் அங்கெல்லாம் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியாது என்பதும் அதற்குத் தெரியும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும், ஏனைய இடங்களில் ஆளும்கட்சியுடன் இணைந்தும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

எங்கெங்கு தனித்துப் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யப் போகிறதாம்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் கொழும்பில் தனித்துப் போட்டியிட முனைந்தார் மனோ கணேசன். ஆனால் கொழும்பில் இப்போது தேர்தல் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது அவருக்குப் பெரிய ஏமாற்றம்.

அதேவேளை வடக்கு,கிழக்கில் ஏனைய பகுதிகளில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விரும்புவதாகவே மனோ கணேசனின் கட்சி கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆசை வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் மோதுவதும் ஏனைய இடங்களில் இணைந்து கொள்வதும் சாத்தியமாக இருக்குமா என்பது சந்தேகமே.

அதேவேளை இரு கட்சிகளும் கொழும்பில் தனித்தனியாகப் போட்டியிட்டால் அது மாநகரசபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்ற கருத்தும் காணப்படுகிறது.

ஜேவிபியோ கூட்டணி ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு மீண்டும் மணிச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடக் கிளம்பி விட்டது.

சரத் பொன்சேகா தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியைக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது ஜேவிபியின் பாரம்பரிய பலத்தைக் காண்பிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெளிவில்லை.

ஆனால் வழக்கம்போலவே எல்லாக் கட்சிகளையும் முந்திக் கொண்டு தனித்தே போட்டியிடுவோம் என்று திடமாக அறிவித்துவிட்டது.

உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எல்லாக்கட்சிகளுமே தமது எங்கு அதிக இலாபம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு இயங்க ஆரம்பித்துள்ளன.

வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமான பின்னர் தான் கூட்டணிக் குழப்பங்கள் உச்சம் பெறும்.

அத்துடன் இறுதியாக எந்தக் கூட்டணியில் யார் யார் நிற்கப் போவது என்பதும் தெரியவரும்.

எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகள் பெரும்பாலும் தமது செல்வாக்குள்ள பகுதிகளில் தனித்தே போட்டியிட விரும்புகின்றன.

ஆளும்கட்சியுடன் இணைந்து போட்டியிட அவை விரும்பவில்லை என்பதே உண்மை.

Keine Kommentare:

Kommentar veröffentlichen