
இந்தியா ,சீனா, பாகிஸ்தான் என்று சிக்கல் நிறைந்த ஒரு வட்டத்துக்குள் இலங்கை சிக்கியுள்ளது. இந்த மூன்று நாடுகளில் எதனுடனும் பகையைப் பேண இலங்கை தயாரில்லை. மூன்று நாடுகளுடனும் ஒரே நேரத்தில் உறவுகளைப் பேண அது விரும்புகிறது.
அதற்காகவே இந்த நாடுகளுடன் அவ்வப்போது வளைந்து கொடுத்து வருகிறது. ஆனால் இந்த நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற நட்புறவை இப்போது ஓரளவுக்கு மதீப்பீடு செய்து கொள்ள முடிகிறது.
இலங்கை அதிகபட்சமாக சீனாவின் நட்பையே விரும்புகிறது.
இரண்டாமிடத்தில் தான் இந்தியாவை வைத்திருக்கிறது.
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது,
இது இந்தியாவுக்கு நன்றாகவே புரிகிறது.
ஆனாலும் சீனா பக்கம் சாய்ந்து விடாதிருப்பதற்காகவே தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் இந்தியா வளைந்து போகிறது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் இலங்கை யாரை அதிகம் நம்புகிறது என்று பார்ப்பதே இந்தப் பத்தியின் நோக்கம்.
இனி,
இலங்கையின் மிகநெருங்கிய நண்பன் இந்தியாவா சீனாவா பாகிஸ்தானா?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரித்தானியா சென்றிருந்த போது "ரைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்குமே கடற்படைத்தளம் அமைக்க இடம்கொடுக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதேவேளை இந்திய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் அவர் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நாடும் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் இலங்கை சிக்கலானதொரு இராஜதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடித்து நகர்ந்து செல்கிறது. இதற்குள் இப்போது பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் இலங்கை யாரை அதிகம் நம்புகிறது என்று பார்ப்பதே இந்தப் பத்தியின் நோக்கம்.
இந்த வருடத்தின் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒஸ்லோவில் கடந்த 10 ந் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்க நோர்வேயில் உள்ள 65 நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இவற்றில் 44 நாடுகள் தான் அழைப்பை ஏற்றுக் கொண்டன.
ஏனைய நாடுகள் அழைப்பைப் புறக்கணித்ததற்குக் காரணம் சீனா.
சீனாவில் ஜனநாயகம் கோரும் மனிதஉரிமை செயற்பாட்டாளர் லியூ சியாவோபோவுக்குத் தான் இந்த வருடத்துக்கான நோபல் சமாதானப்பரிசு அறிவிக்கப்பட்டது. 11 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் லியூ சியாவோபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை சீனா கடுமையாக எதிர்த்தது.
இதன் காரணமாக சீனா தனது நட்பு நாடுகளுக்கு நோபல் பரிசு வழங்கும் நிகழ்வைப் புறக்கணிக்குமாறு கோரியிருந்தது.
சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணும் நாடுகள், வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் இதற்குச் செவி சாய்த்தன.
இந்தவகையில் இலங்கையும் இந்த நிகழ்வைப் புறக்கணித்தது.
சுமார் 20 நாடுகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கியமானது. சீனாவுக்காக இந்த நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன.
சீன மனித உரிமைச் செயற்பாட்டாளர் லியூ சியாவோபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே இலங்கை அரசாங்கம் அதுபற்றி வாய் திறக்கக் கூட இல்லை.
இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாக சீனா இருப்பதாலேயே அது அமைதியாக இருந்து கொண்டது.
ஒருமுறை அமைச்சர் சரத் அமுனுகம நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும் கடவுளாக சீனா இருப்பதாகக் கூறியிருந்தார்.
இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் சீனா தட்டிக் கழிக்காமல் வழங்கி உதவுகிறது.
அப்படிப்பட்ட நண்பனை இழக்க இலங்கை ஒருபோதும் தயாராக இல்லை.
அதுமட்டுமன்றி இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்ட போது அதை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தது சீனா.
இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகளும் அப்போது இலங்கைக்கு உதவின.
ஆனாலும் சீனாவின் உதவியே இலங்கைக்கு மிகப்பெரியதாக உள்ளது.
இந்தியாவுக்கு சர்வதேச அளவில் செல்வாக்கும் பலமும் இருந்தாலும் அதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கிடையாது.
ஆனால் சீனாவுக்கு உள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் எந்த நகர்வு எடுக்கப்படாலும் அதை முறியடித்து உதவ சீனா தயாராக உள்ளது.
நோபல் பரிசு நிகழ்வைப் புறக்கணித்ததன் மூலம் சீனாவுக்கு தனது விசுவாசத்தையும், நன்றியையும் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் இலங்கையின் இந்த முடிவு இந்தியாவுக்கு நிச்சயம் எரிச்சலைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தெற்காசியாவில் குறிப்பாக இலங்கையில் சீனாவின் நகர்வுகள் விடயத்தில் இந்தியா கடும் அதிருப்தி கொண்டுள்ளது.
தனக்கு எதிராகப் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை என்று ஒரு முத்துமாலை வியூகத்தை சீனா வகுப்பதாக இந்தியா கருதுகிறது.
இந்தநிலையில் இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா அமைப்பதும், அதிகளவிலான முதலீடுகளைச் செய்வதும் இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சீனாவின் முதலீடுகள் இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள இந்தியா விரும்பவில்லை.
ஆனால் சீனாவின் நகர்வுகளைக் கண்காணிக்கும் நோக்கில் அம்பாந்தோட்டையில் ஒரு துணைத் தூதரகத்தை இந்தியா திறந்து வைத்துள்ளது.
இலங்கை எப்போதும் தன் காலடிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது இந்தியா.
ஆனால் இலங்கையோ சீனாவின் நட்பைத் துறந்து விடும் நிலையில் இல்லை.
கேட்பதையெல்லாம் கொடுக்கும் கடவுளாக சீனா இருப்பதால் இந்தியாவுடன் ஒட்டிக் கொள்ள இலங்கை தயாராக இல்லை. இந்தியாவையும் பகைக்காமல் சீனாவுடன் உறவைப் பேண இலங்கை முனைகிறது, ஆனால் எல்லா வேளைகளிலும் அது சாத்தியமாகாது.
சீனாவின் மனிதஉரிமை செயற்பாட்டாளருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை இலங்கை புறக்கணித்தது சீனாவுக்கு சார்பான ஒரு விடயம்.
அதுவும் இந்தியாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும்.
நோபல் பரிசு பெற்ற சீனாவின் மனிதஉரிமை செயற்பாட்டாளர் அங்கு ஜனநாயகத்தைப் கோருகிறார்.
ஆனால் தம்மை ஜனநாயக நாடுகள் என்று கூறிக் கொள்ளும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அந்த நிகழ்வைப் புறக்கணித்தன.
இதிலிருந்து ஜனநாயகம் என்பது கேள்விக்குரியதொரு விடயமாக மாறியுள்ளது.
அரசியல் வர்த்தக நலன்களை முன்னிறுத்திய ஜனநாயகமே இப்போது முதன்மை பெற்றுள்ளது.
இந்த முரண்பட்ட நிலைக்குள் இலங்கையும், சீனாவும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவது சிக்கலானதொரு நிலை தான்.
இதைச் செய்வது கத்திமேல் நடப்பதற்கு ஒப்பானது.
இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுத்து அதை சீனா பக்கம் சாய விடுவதற்கு இந்தியா தயாராக இல்லை.
அதனால் தான் அது தமிழர் நலனுக்கு விரோதமான பல விடயங்களைக் கூட சகித்துக் கொண்டிருக்கிறது,
அதேவேளை பாகிஸ்தான் அதிபர் அண்மையில் இலங்கை வந்திருந்த போது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் பேசியிருந்தார்.
இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடைச் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இந்தியா நிச்சயம் விரும்பாது என்பது இலங்கைக்குத் தெரியும்.
பாகிஸ்தானை நட்பு நாடாக இலங்கை கருதுகிறது. ஆனால் இந்தியாவை மீறும் வகையில் அதனுடன் நட்பைப் பேணத் தயாரில்லை. இதனால் தான் பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ள இலங்கை தயாராக இல்லை.
பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்வது குறித்து பேசப்படவில்லை என்று கூறியிருக்கிறார் பாதுகாப்பு செயலர். இதன் மூலம் இந்தியாவை அவர் திருப்திப்படுத்த முனைகிறார். ஆனால் பாகிஸ்தானுடன் நட்புறவை துண்டிப்பதற்கு இலங்கை தயாரில்லை. அதனுடனான வர்த்தக, பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்து அதிகரிப்பதற்கு இலங்கை விரும்புகிறது.
இந்தியா ,சீனா, பாகிஸ்தான் என்று சிக்கல் நிறைந்த ஒரு வட்டத்துக்குள் இலங்கை சிக்கியுள்ளது. இந்த மூன்று நாடுகளில் எதனுடனும் பகையைப் பேண இலங்கை தயாரில்லை. மூன்று நாடுகளுடனும் ஒரே நேரத்தில் உறவுகளைப் பேண அது விரும்புகிறது. அதற்காகவே இந்த நாடுகளுடன் அவ்வப்போது வளைந்து கொடுத்து வருகிறது. ஆனால் இந்த நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற நட்புறவை இப்போது ஓரளவுக்கு மதீப்பீடு செய்து கொள்ள முடிகிறது.
இலங்கை அதிகபட்சமாக சீனாவின் நட்பையே விரும்புகிறது.
இரண்டாமிடத்தில் தான் இந்தியாவை வைத்திருக்கிறது.
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது,
இது இந்தியாவுக்கு நன்றாகவே புரிகிறது.
ஆனாலும் சீனா பக்கம் சாய்ந்து விடாதிருப்பதற்காகவே தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் இந்தியா வளைந்து போகிறது.
கடந்த வாரம் புதுடெல்லியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் அரசியல் தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று தெரிவித்த கருத்தை இந்தியாவின் தனிப்பட்ட கருத்தாகக் கருத முடியாது. உலக ஒழுங்குக்கு அமைய இந்தியா எடுத்துள்ள முடிவே அது. இந்த உலக ஒழுங்கை இலங்கை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதன் காரணமாகவே எத்தகைய அழுத்தங்களையும் அதனால் சுலபமாக சமாளித்துக் கொள்ள முடிகிறது.
கட்டுரையாளர் கபிலன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen