Main Pages Kathiravan.com

Sonntag, 30. Januar 2011

எதைச் செய்யப் போகிறது நல்லிணக்க ஆணைக்குழு?: மகிந்த அரசை நெருக்கடியில் இருந்து மீளவைப்பதோ அல்லது நெருக்கடியில் சிக்கவைப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவின் கைய



நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையுமா?

 ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பின்றி அமைய வேண்டுமானால் அனைத்து தரப்பினரதும் சாட்சியங்கள் பெறப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொறுத்தவரை இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்தளவுக்கு இது பக்கச்சார்பற்றதாக இருக்கப் போகிறது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்றெல்லாம் பல நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சில சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை நிராகரித்துள்ளன. மூன்று தசாப்தப் போரினால் ஏற்பட்ட அழிவுகள், காயங்களுக்கு மருந்திடும் வகையில் தீர்வுகளைக் காண்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு அந்தவகையில் பொறுப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதுமட்டுமன்றி இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கையில் பிறழ்வுகள். குழப்பங்கள் தென்பட்டால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.


இனி,


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது.

அம்பாறையில் நடத்தப்படும் அமர்வின் பின்னர் இந்த மாத இறுதியுடன் சாட்சியங்கள் பதிவு செய்வதை முடிவுக்கு கொண்டு வர நல்லிணக்க ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

மே மாதம் வரைக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலஅவகாசம் இருக்கின்ற போதும் அறிக்கை தயாரிப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்பதாலேயே சாட்சியங்கள் பதிவு செய்வதை நிறுத்தப் போவதாக அது கூறியுள்ளது.

ஆயிரக்கணக்கானோரிடம் சாட்சியங்களை அது நேரடியாகப் பெற்றுள்ளது.

மேலும் பெருமளவிலானோரின் சாட்சியங்களை எழுத்து மூலமும் பெற்றுள்ளது.

இந்தச் சாட்சியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிப்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல.

நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொறுத்தவரை இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எந்தளவுக்கு இது பக்கச்சார்பற்றதாக இருக்கப் போகிறது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்றெல்லாம் பல நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சில சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை நிராகரித்துள்ளன. மொத்தத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அது முற்றுமுழுதாக நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மீது நம்பிக்கை இல்லை என்றும், பக்கச்சார்பின்றி நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென்றும் அவை கூறியுள்ளன. இறுதிப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகள் கூட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை.  இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் யாருக்காவது அநீதி ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி வருகின்றது.

இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிநாடுகள் எதிர்பார்த்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

நல்லிணக்க ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொண்டிராத தரப்பினரும் கூட இந்த அறிக்கை எவ்வாறு அமையப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

இப்படியான எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தெளிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு 2002 பெப்ரவரி மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்கவே உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆணைக்குழு அதற்கு முந்திய சம்பவங்கள் தொடர்பாகவும் சாட்சியங்களைப் பெற்றுள்ளது.

அதேவேளை போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பான சாட்சியங்களையும் பெற்றுள்ளது.

ஆனால்,
இந்தப் போருடன் அல்லது சமாதானப் பேச்சுகளுடன் சம்பந்தப்பட்ட பலரின் சாட்சியங்களை ஆணைக்குழு இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத் தரப்பில், புலிகளுடன் பேசியவர்கள் பெரும்பாலும் எவருமே சாட்சியமளிக்கவில்லை.


ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதற்குப் பதில் அளிக்கவில்லை.


அப்போது ஜனாதிபதியாக இருந்தவரும் சமாதான முயற்சிகள் சீர்குலைவதற்கு வெளிப்படையான காரணியாக இருந்தவருமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு பல வாரங்களாகியுள்ளன. இப்போது தான் அவர் தனக்கு அழைப்புக் கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பாரா இல்லையா என்று அவர் இன்னும் உறுதி செய்யவில்லை.

இவர்கள் இருவரும் தான் சமாதான கால நடவடிக்கைகள் அனைத்தையும் நன்றாக அறிந்தவர்கள்.

சமாதான முயற்சிகள் தோல்வியுற்றதற்கான காரணங்களைக் கண்டறிவதும் இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாக உள்ள நிலையில் இவர்களின் சாட்சியங்கள் தவிர்க்கப்படுமானால் அதில் பயனேதும் இருக்க முடியாது.

இவர்கள் தவிர சமாதான முயற்சிகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் பெரும்பாலும் சாட்சியம் அளிக்கவில்லை.

துணை நிலைப் பாத்திரம் வகித்த எஸ்.எல்.குணசேகர, கோமின் தயாசிறி, எச்.எச்.டி.மகிந்தபால போன்ற சிலர் தான் சாட்சியமளித்துள்ளனர்.

அதைவிட விசாரணைக் காலத்தின் பெரும் பகுதியில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் கூட இந்த ஆணைக்குழுவிடம் சாட்சியங்களை பதிவு செய்யவில்லை.

அவர் நேரடியாகவோ அல்லது தனது செயலாளர் மூலமோ அதைச் செய்திருக்க முடியும்.

அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.

அதேவேளை புலிகள் தரப்பின் சாட்சியங்கள் ஏதும் பெறப்படவும் இல்லை.

அது சாத்தியமற்றதென்று கூறப்பட்டாலும் அவர்கள் தரப்பு நியாயங்களைத் தேட வேண்டியதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறுப்பே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சாட்சியங்களைச் சமர்ப்பிக்கப் போவதாகக் கூறியிருந்தது. ஆனால் இரா.சம்பந்தன் சுகவீனமடைந்ததால் அது நின்று போனது. இனிமேல் அது சாட்சியங்களை சமர்ப்பிக்குமா இல்லையா என்பது தெளிவாகவில்லை.
மொத்தத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அது முற்றுமுழுதாக நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பின்றி அமைய வேண்டுமானால் அனைத்து தரப்பினரதும் சாட்சியங்கள் பெறப்பட வேண்டும்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும்.

அப்போது தான் அது நடுநிலையானதாக பக்கச் சார்பற்றதாக அமையும்.
மூன்று தசாப்தப் போரினால் ஏற்பட்ட அழிவுகள், காயங்களுக்கு மருந்திடும் வகையில் தீர்வுகளைக் காண்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு அந்தவகையில் பொறுப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதுமட்டுமன்றி இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் பிறழ்வுகள். குழப்பங்கள் தென்பட்டால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

இந்தக் கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் இருந்து மீளவைப்பதோ அல்லது நெருக்கடியில் சிக்கவைப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவின் கையில் தான் உள்ளது.

இதில் நல்லிணக்க ஆணைக்குழு எதைச் செய்யப் போகிறது?

இலங்கை அரசை நெருக்கடிகளில் இருந்து மீட்குமா அதைச் செய்ய வேண்டுமானால் அனைத்து தரப்பிடமும் சாட்சிகள் பெற்று நடுநிலையான பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதானால் எதையும் செய்யாமல் மேன்போக்கான ஒரு அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்து விட்டாலே போதும்.

இதில் எதைச் செய்யப் போகிறது நல்லிணக்க ஆணைக்குழு?

கட்டுரையாளர் கபில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen