Main Pages Kathiravan.com

Sonntag, 15. August 2010

எவ்வளவு விலை கொடுத்தும்: "அவமானத்தின் சின்னமாய்" அழிந்து போகும் நிலையில் ஈழத்தமிழினம்:..............?


தமிழர்களைக் கையறு நிலைக்குள் தள்ளி விட்டுள்ள போரின் முடிவு
புலிகளோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் சமாதி கட்டி விட்டதாகவே அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. புலிகள் போன்று இனப்பிரச்சினைத் தீர்வை வலியுறுத்தக் கூடிய தமிழர் தரப்பு என்று எதுவும்; இல்லாததால்- அதைப் பற்றிய கவலையேதுமின்றிக் காலத்தைக் கழிக்கிறது அரசாங்கம். இதன்காரணமாக தமிழ்மக்கள் மத்தியில் அரசியல்தீர்வு என்பது வெறும் கானல்நீராகி விடுமோ என்ற கவலை தோன்றியுள்ளது. இனப்பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட போரும் அதில் ஏற்பட்ட அழிவுகளும்- ஒரு குறைந்தபட்ச அரசியல்தீர்வைக் கூடப் பெற்றுத் தராமல் போனதையிட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர். எவ்வளவு விலை கொடுத்தும் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்படவில்லையே என்ற கவலை தமிழர்களிடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டு விடும் போலத் தெரிகிறது.
போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில்- தமிழ்மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இரண்டு விடயங்களில் அச்சஉணர்வு மேலோங்கியுள்ளது.
முதலாவது- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியது.
இரண்டாவது- சிங்களக் குடியேற்றங்கள் பற்றியது.
புலிகள் இயக்கம் பலமாக இருந்தவரை- ஆயுதப்போராட்டம் நடந்து கொண்டிருந்த வரையில்- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி அடிக்கடி பேசப்படும். அப்போது அது தமிழருக்கு மட்டும் தேவையானதொன்றாக இருக்கவில்லை. அரசாங்கத்துக்கும் தென்னிலங்கைச் சிங்கள சமூகத்துக்கும் கூட இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிக் கதைக்க வேண்டிய தேவையிருந்தது. ஏனென்றால் அவர்களின் அரசியல் பிழைப்பு அதில் தான் தங்கியிருந்தது. காலத்துக்குக் காலம் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய ஒவ்வொரு கருத்துக்களைக் கூறி அவர்கள் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டனர்.

புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு அரசியல்தீர்வு பற்றி யாருமே பேசுவதில்லை. ஏதோ அவ்வப்போது சில தமிழ்க்கட்சிகள் பேசிக் கொண்டாலும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அரசாங்கத்திடம் அரசியல்தீர்வு எண்ணக்கரு கொஞ்சமும் கிடையாது என்பதே உண்மை.
புலிகளோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் சமாதி கட்டி விட்டதாகவே அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. புலிகள் போன்று இனப்பிரச்சினைத் தீர்வை வலியுறுத்தக் கூடிய தமிழர் தரப்பு என்று எதுவும்; இல்லாததால்- அதைப் பற்றிய கவலையேதுமின்றிக் காலத்தைக் கழிக்கிறது அரசாங்கம். இதன்காரணமாக தமிழ்மக்கள் மத்தியில் அரசியல்தீர்வு என்பது வெறும் கானல்நீராகி விடுமோ என்ற கவலை தோன்றியுள்ளது. இனப்பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட போரும் அதில் ஏற்பட்ட அழிவுகளும்- ஒரு குறைந்தபட்ச அரசியல்தீர்வைக் கூடப் பெற்றுத் தராமல் போனதையிட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர். எவ்வளவு விலை கொடுத்தும் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்படவில்லையே என்ற கவலை தமிழர்களிடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டு விடும் போலத் தெரிகிறது. அதேவேளை, இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கான தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மறுபடியும் தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன.

முன்னர் கிழக்கில் தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தது. கிழக்கைத் தமிர்களிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடப்பதாக தமிழர்கள் முன்னர் பயந்தார்கள். அதுபோலவே நடந்தும் விட்டது. இப்போது வடக்கின் மீது அதேபோன்று குறி வைக்கப்பட்டிருக்கிறது.

வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மிகத் தீவிரமாக நடைபெறப் போகின்றன. ஏற்கனவே சிறியளவில் தொடங்கி விட்ட சிங்களக் குடியேற்றங்கள் வரும் நாட்களில் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கப் போவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. முல்லைத்தீவின் தெற்குப் பகுதியில் மணலாறுப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இப்போது நாயாறு வரை விரிவு பெறப் போகின்றன. வவுனியா வடக்கிலும் அதே கதி தான். இதைவிட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் படையினரின் குடும்பங்களைக் குடியமர்த்தப் போவதாக அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

இராணுவ முகாம்களுக்கு அருகிலேயே படையினரின் குடும்பங்களையும் குடியமர்த்தும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவையொன்றும் ஊகமோ அல்லது மிகைப்படுத்திய செய்தியோ அல்ல. எல்லாமே அரசதரப்பின் வாயிருந்து வந்தவை தான்.
 
சுமார் நான்கு இலட்சம் சிங்களவர்கள் வன்னியில் குடியேற்றப்படும் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கென வன்னியில் பல இடங்களில் தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும், அங்கு தமிழ் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலும் அதற்குச் சொந்தமான நிலமும் கூட விட்டு வைக்கப்படாது போலுள்ளது. அந்தளவுக்கு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் பெருகி வருகின்றன.

தமிழ் மக்களைப் பெரிதும் அச்சுறுத்துமம் வகையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் அடிப்படை நோக்கம் தமிழர்களை வடக்கில் சிறுபான்மையினராக்குவதே. புலிகள் மீள் எழுச்சி பெற விடாமல் தடுப்பது- பாதுகாப்பை பலப்படுத்துவது என்று பல்வேறு நியாயங்களை அரசாங்கமும் படைத்தரப்பும் கூறிக் கொண்டாலும் அவையெல்லாம் வெறும் சப்பை நியாயங்கள் தான் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக மாற்றப்படும் அவலத்தைத் தமிழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்தவாரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் பேசும்போது, 159,000 சிங்களவர்கள் வடக்கில் இருந்த புலிகளால் வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களையே மீளக்குடியேற்றுவதாகவும் கூறியிருக்கிறார். இதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க தான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் பேசிய போது- 1983ம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து 21,000 சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறியிருந்தார். முன்னர் வடக்கில் சிங்களவர்கள் பெருமளவில் வசித்தது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கவே அவர் முயற்சிக்கிறார். அவர் அவ்வப்போது இவ்வாறு தவறான புள்ளிவிபரங்களைக் கூறி சிங்கள மக்களை உசுப்பி விடுவதுடன் தமிழ் மக்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கிறார்.

போரின் முடிவுக்குப் பிறகு அரசாங்கம் நன்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. வன்னியில் இப்போது புதிது புதிதாக முளைக்கின்ற புத்த கோவில்களும், சிலைகளும், தமிழ்கிராமங்களுக்கு சூட்டப்படும் சிங்களப் பெயர்களும் தமிழர்களைப் பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. வடக்கில் கூட தமிழர்களால் தனித்துவத்தோடு வாழ முடியாத நிலை ஒன்று விரைவில் உருவாக்கப்பட்டு விடும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைத்து- தமிழர்களை சிங்களவர்களின் மீது தங்கி வாழ்பவர்களாக மாற்றியமைப்பதற்கே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பலஸ்தீனத்தில் இராணுவக் குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்து யூதர்களைக் குடியமரத்தியது போன்றே வன்னியில் இலங்கை அரசு செய்கிறது. தமிழர்களைப் பெரிதும் அச்சத்துக்குள் தள்ளியுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்கள் திணறிப் போயுள்ளனர். இதற்கெதிராக குரல் கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைந்தாலும் அதற்கு அப்பால் என்ன செய்வது என்று தெரியாத நிலை அவர்களுக்கும் உள்ளது.

தமிழர்கள் இப்போது இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வும் இல்லாமல், தமது சொந்த நிலத்திலேயே நடந்தேறும சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கத் திராணியற்றவர்களுமாக மாறியிருக்கின்றன. இதற்குக் காணரம் போரில் தமிழர்கள் தரப்பில் ஈடுபட்ட புலிகளுக்கு ஏற்பட்ட தோல்வி தான். புலிகளின் தோல்வி என்பது பயங்கரவாதத்தின் தோல்வியாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும்- அது தமிழர்கள் தமது வாழ்வியல் மற்றும் வாழ்விட அடையாளங்களைத் தொலைப்பதற்குக் காரணமானதொரு தோல்வியாக மாறிவிட்டது என்பதே உண்மை.

இதன்காரணமாகவே தான் தமிழ் மக்கள் இன்று தமது காணிகள் அபகரிக்கப்படும் போதும் சரி- இனப்பிரச்சினை தான் ஏதுவுமே இல்லை என்று கூறப்படுகின்ற போதும் சரி- அவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக- கையறுநிலையில் இருக்கிறார்கள்.

கட்டுரையாளர் சத்திரியன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen