
சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், சரணடைய வந்த வி.புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும், ஐ.நா விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகளுக்காக கொழும்பி உள்ள தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகள் உட்பட பலரிடம் தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே, அண்மையில் ஐ.நா அதிகாரி பிலில் அல்ஸ்டன் சிறீலங்கா அரசிடம் பொன்சேகவின் அறிக்கை தொடர்பாக விளக்கம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடையை வந்த வி.புலிகளின் முக்கிய தலைவர்களை, கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரிலேயே இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக, முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றுமொரு தகவலும் கசிந்துள்ளது.
வி.புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் போரின் கடைசி காலப்பகுதியில் படையினரிடம் சரணடைய வரும் போது கொல்லப்படவில்லை எனவும், ஏற்கனவே படையினரால் பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருந்த போது ஏற்பட்ட சண்டையின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், இராணுவத்தரப்பின் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளன.
தொடரும் இவ் சர்ச்சைகளினால் சிறீலங்கா இராணுவத்திற்கு மிகுந்த அழுத்தம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen