
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த விமானப்படை, புதிய தளபதியின் கீழ் மேலும் பலத்தைப் பெருக்கவே முனைகிறது.
இறுதிப் போரின் முடிவில் புலிகளின் விமானப்படை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதால் இலங்கை விமானப்படை இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டது. 2007ம் ஆண்டில் அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகள் விமானப்படைக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர். இந்தத் தாக்குதலில் விமானப்படையின் கணிசமான கண்பாணிப்பு ஆற்றலும், பயிற்சி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்து ஒரே வாரத்தில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை நடத்தி விமானப்படை இழந்து போன மனோபலத்தை மீளக்கட்டியெழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
.இனி,
புதிய தளபதியின் கீழ் பலம் பெறும் விமானப்படை
இலங்கை விமானப்படை இந்த வாரம் இரு முக்கிய நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது.
விமானப்படையின் புதிய தளபதியாக எயர் வைஸ் மார்சல் ஹர்ஷ அபேவிக்கிரம பதவியேற்கவுள்ளார் என்பது முதலாவது விடயம்.
இலங்கை விமானப்படையின் 60 வது ஆண்டு நிறைவு இன்று 2ம் திகதி கொண்டாடப்படுவது இரண்டாவது விடயம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவமும் கடற்படையும் 60 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளைப் பெருமெடுப்பில் கொண்டாடியிருந்தன. விமானப்படையும் அதுபோலவே பெரியளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எனினும் நேற்று முன்தினம் விமானப்படை சந்தித்த விபத்து இக்கொண்டாட்டங்களின் சாகசங்களை நிறுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளமை விமானப்படையை பொறுத்தவரை சோகம் தான்.
இன்று 2ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வரை விமானப்படையின் 60 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
விமானங்களின் சாகச நிகழ்வுகள், கலைநிகழ்வுகள், கண்காட்சி என்று கடந்த 60 ஆண்டுகால சாதனைகளை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவதற்கு விமானப்படை திட்டமிட்டுள்ளது.
இன்று கொளும்பு விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக்கை பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அண்மையிலேயே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பிரதித் தளபதி எயர் மார்ஷல் பிறவுண், இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். அத்துடன் இந்திய விமானப்படையில் உள்ள ரஸ்யத் தயாரிப்பு அதிநவீன போர் விமானங்களான சுகோய்30 போர் விமானங்களின் அணியொன்றையும் இந்த விழாவுக்கு அனுப்பவுள்ளது இந்தியா.
இந்தியாவின் போர் விமானங்களும், விமானப்படை பிரதித் தளபதியும் இந்த நிகழ்வில் பங்கேற்கக் கூடாதென்று தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் இந்திய விமானப்படைப் பிரதித் தளபதி எயர் மார்ஷல் பிறவுண் சுகோய் போர் விமானங்களின் அணியுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றமை உறுதியாகியுள்ளது.
இந்தக் கட்டத்திலேயே இலங்கை விமானப்படையில் தளபதி மாற்றமும் நிகழ்கிறது.
விமானப்படையின் 13வது தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையின் 12 வது விமானப்படைத் தளபதியாக விளங்கிய எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக கடந்த திங்கட்கிழமை 55 வயதை நிறைவு செய்துள்ள நிலையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக விமானப்படைத் தளபதி பதவியில் இருந்த ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அவர் கூட்டுப்படைகளின் பதில் தளபதியாகப் பதவியேற்றுள்ளார்.
சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதி பதவியை விட்டு விலகிச் சென்ற பின்னர் எயர்சீவ் மார்ஷல் றொசன் குணதிலக பதில் கடமையைப் பொறுப்பேற்றார்.
விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஒய்வுபெற்ற பின்னர் இப்போது கூட்டுப்படைகளனின் பதில் தளபதியாக இருக்கும் எயர்சீவ் மார்ஷல் றொசான் குணதிலக கூட்டுப்படைகளின் தளபதியாக பதவியேற்றுள்ளார். இவருக்கு அரசாங்க உயர்மட்டத்தில் நன்மதிப்பு அதிகம் இருக்கிறது.
2006 ஜுன் மாதம் விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற இவர் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் முழுமையாகப் பணியாற்றியவர்.
இவருடன் கூட இருந்து போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் ஏற்கனவே ஓய்வு பெற்றுச் சென்று விட்டனர். ஆனாலும் போர் முடிந்து சுமார் இரண்டு வருடகாலத்துக்கு எயர் சீவ் மார்ஷல் குணதிலக விமானப்படைத் தளபதி பதவியை தக்க வைத்திருந்தார். இவரது காலத்தில் விமானப்படை அதிகளவு நெருக்கடிகளைச் சந்தித்த அதேவேளை பெரும் பலமும் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்களை நடத்தி விமானப்படைக்கு நெருக்கடி கொடுத்தன. இது இலங்கை விமானப்படையின் வேறெந்தத் தளபதியும் சந்திக்காத நெருக்கடி. இதுபோன்ற நெருக்கடியை இனிவரப் போகும் தளபதிகளும் சந்திப்பதற்கு வாய்ப்பில்லை.
வான் தாக்குதல் முறியடிப்பு மட்டுமன்றி புலிகளின் விமானங்களைத் துரத்தும் வான் சண்டைகளை நிகழ்த்த வேண்டிய நெருக்கடியான கட்டத்தையும் எயர் சீவ் மார்ஷல் குணதிலகவின் காலத்தில் விமானப்படை எதிர்கொண்டது. இறுதிப் போரின் முடிவில் புலிகளின் விமானப்படை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதால் இலங்கை விமானப்படை இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டது.
2007ம் ஆண்டில் அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகள் விமானப்படைக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர். இந்தத் தாக்குதலில் விமானப்படையின் கணிசமான கண்பாணிப்பு ஆற்றலும், பயிற்சி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்து ஒரே வாரத்தில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை நடத்தி விமானப்படை இழந்து போன மனோபலத்தை மீளக்கட்டியெழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற போது சுமார் 900 அதிகாரிகளும் 19,000 படையினருமே விமானப்படையின் ஆட்பலமாக இருந்தது. இவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது 1500 அதிகாரிகளையும் 35,000 படையினரையும் கொண்ட பலம்வாய்ந்த படையாக அது மாறியுள்ளது.
இவரது சுமார் ஐந்து வருட பதவிக்காலத்தில் விமானப்படையின் ஆட்பலம் சுமார் 16.000 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு மடங்கிலும் சற்றே குறைவானது.
இப்போது விமானப்படை 110 விமானங்களையும் கொண்டுள்ள பலம் கொண்ட படையாக மாற்றம் பெற்றுள்ளது.
விமானப்படையின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம முன்பு விமானப்படையின் தலைமை அதிகாரியாக இருந்தவர். இந்தப் பதவிக்கு இவர் வந்து இரண்டொரு வாரங்கள் தான் ஆகியுள்ளது.
கடந்த பெப்ரவரி 1 ம் திகதி வரை இந்தப் பதவியில் இருந்தவர் எயர் வைஸ் மார்ஷல் பி.பி.பிறேமச்சந்திரா.
இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழர். சேவை மூப்பு அடிப்படையில் இவரே அடுத்த விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை.
அவர் 55 வயதை அடையும் முன்னரே கடந்த 1ம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.
அவருக்கு இப்போது பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை அடையும் முன்னர் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள சூழலில் அவர் ஓய்வுபெற்றது ஏன் என்பது மர்மமே.
இவர் ஓய்வுபெற்றதை அடுத்தே சேவை மூப்பு பட்டியலில் இரண்டாவது நிலைக்கு வந்தார் எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம.
விமானப்படையின் 13வது தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம முன்னர் 5வது ஜெட் ஸ்குவாட்ரனின் தளபதியாக இருந்தவர்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அவர் விமானப்படையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.
குறிப்பாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் இவரது வழிநடத்தலிலேயே மேற்கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த விமானப்படை, புதிய தளபதியின் கீழ் மேலும் பலத்தைப் பெருக்கவே முனைகிறது. அண்மையில் தியத்தலாவ முகாமில் 1000 மாணவ கடெற் பயிலுனர்களுக்கு விமானப்படை பயிற்சிகளை வழங்கியதில் இருந்து இது உறுதியாகிறது.
கட்டுரையாளர் சுபத்ரா
Keine Kommentare:
Kommentar veröffentlichen